இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோய் துறை தலைவர் டொக்டர்.ஷமிரான் பாண்டா இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை குறிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலங்களிலும் மூன்றாவது அலை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் தயார் நிலைக் குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை திறப்பது பாதுகாப்பானதா, இல்லையா என்பதை யோசிப்பதை விட ஆசிரியர்கள் பெற்றோர்கள், ஊழியர்கள் ஆகியோர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.