பிரித்தானிய இராணுவம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் நிரந்தரமாக இங்கிலாந்தில் தங்க முடியும் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
முன்னர் வழங்கப்பட்ட ஐந்து வருட வதிவிடத்தை விட காலவரையற்ற விடுப்பு வழங்கப்படும் என்றும் உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 13 முதல் ஆப்கானிஸ்தான் இருந்து வெளியேற்றத்திற்கு தகுதியின 8,000 க்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்து வெளியேற்றியது.
ஆனால், ஆப்கானிஸ்தானில் பல உயிர்கள் ஆபத்தில் இருக்கும் நிலையில் இன்னும் பலரை வெளியேற்ற வேண்டும் என தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டிஷ் துருப்புக்கள் வார இறுதியில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்தின் 20 வருட இராணுவ ஈடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள், அரசாங்கத்திற்கும் இராணுவத்துக்கும் உதவியிருந்தால் அவர்கள் தொடர்ந்து பிரித்தானியாவிலேயே வசிக்கலாம் என வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரிட்டனுக்கு வர தகுதியானவர்களின் எண்ணிக்கை குறித்து ஒரு உறுதியான புள்ளிவிவரத்தை வழங்க முடியாது என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியுள்ளார்.