கொரோனா தொற்றுக்கு உள்ளான 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், ஆயிரத்து 2 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக அந்த அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 39 ஆயிரத்து 160 கட்டில்கள் காணப்படுகின்ற நிலையில், தற்போது 34 ஆயிரத்து 800 கட்டில்களில் கொரோனா நோயாளிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 353 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.