மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கொரோன ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 02 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.