நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவார்ட் கப்ரால் இவ்வாறு இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது மத்திய வங்கி ஆளுநராக பணியாற்றும் டபிள்யூ .டி. லக்ஷ்மன் சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.
2008 ஆம் ஆண்டு மத்திய வங்கி ஆளுநராக இருந்த போது அஜித் நிவார்ட் கப்ரால், உள்நாட்டு யுத்தம் மற்றும் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சவாலை எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.