ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் ஜென்சன் ப்ரூக்ஸ்பியை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், நோவக் ஜோகோவிச் 1-6, 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் ஒஸ்கார் ஓட்டேவும் இத்தாலியின் மெட்டியோ பெரிட்டினியும் மோதினர்.
இப்போட்டியில் மெட்டியோ பெரிட்டினி, 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரி, கனடாவின் பியன்கா அண்ரெஸ்குவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் மரியா சக்கரி, 6-7, 7-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், ரஷ்யாவின் அனஸ்தேசியா பாவ்லுசென்கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில், கரோலினா பிளிஸ்கோவா 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.