இலங்கையில் இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அதன்படி இதுவரை இலங்கையில் மொத்தமாக 1 கோடியே 2 இலட்சத்து 11 ஆயிரத்து 537 பேருக்கு தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம் இலங்கையில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குறைந்தது தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் சுமார் 100 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 20-30 வயதிற்குட்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குறைந்தது தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.