ஓட்சிசன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு ஒட்சிசன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தடுப்பூசி இயக்கத்தை ஆய்வு செய்யும் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில், கொரோனா சூழ்நிலை குறித்தும், சுகாதார அமைப்புகளின் தயார்நிலை மற்றும் மருத்துவ ஒட்சிசன், தடுப்பூசிகள் விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதன்போது பேசிய பிரதமர், மாநிலங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் ஒட்சிசன் செறிவூட்டிகள் மற்றும் மூன்று இலட்சம் ஒட்சிசன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் ஒட்சிசன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு ஒட்சிசன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மேலும், உருமாறிய கொரோனாவின் தோற்றத்தைக் கண்காணிக்க, நிலையான மரபணு வரிசைப்படுத்தலின் அவசியம் குறித்தும் பிரதமர் உரையாற்றினார்.