இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோன்று நேற்றைய தினம் சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 1இலட்சத்து 69 ஆயிரத்து 591 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 90ஆயிரத்து 368 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை 1 இலட்சத்து 59ஆயிரத்து 089 பேருக்கு, ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், 43ஆயிரத்து 450 பேருக்கு ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று இதுவரை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 105 பேருக்கு, ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 40ஆயிரத்து 74 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்ததப்பட்டுள்ளது.
இதேவேளை 7 இலட்சத்து 72 ஆயிரத்து 936 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 7 இலட்சத்து 37ஆயிரத்து 379 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.