மருத்துவமனைகளில் கொவிட் -19 தொற்றுகள் அதிகரித்ததால், வேல்ஸ் சுகாதார சபை, சில அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை இரத்து செய்துள்ளது.
வடக்கு வேல்ஸை உள்ளடக்கிய பெட்ஸி கேட்வாலாடர் சுகாதார சபை, இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. அதேவேளை நோயாளிகளை பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ஸி கேட்வாலாட்ர் சுகாதார சபையின் நிர்வாக மருத்துவ இயக்குனர் டாக்டர் நிக் லியோன்ஸ் கூறுகையில், ‘எங்கள் மருத்துவமனைகளில் கொவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருக்கிறது. அதனால் நோயாளிகளை பாதுகாப்பாகப் பராமரிக்க முடியும்.
மருத்துவமனைகளில் கொவிட் -19 தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை காரணமாக, எங்கள் தளங்களில் கூடுதல் திறனை பாதுகாப்பாக வழங்க முடியும் என்பதை உறுதி செய்ய இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்பாடுகளை ஒத்திவைப்பது நாங்கள் இலகுவாக எடுத்த முடிவு அல்ல. இதனால் ஏற்படும் துன்பம் மற்றும் ஏமாற்றத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்’ என கூறினார்.
மேலும், சுகாதார சபை அதன் நான்கு மருத்துவமனைகளில் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதால் மருத்துவமனை வருகைகளை கணிசமாகக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
ஹைவெல் டிடிஏ சுகாதார வாரியம் சில திட்டமிடப்பட்ட எலும்பியல் அறுவை சிகிச்சையை இடைநிறுத்திய பிறகு, மற்றும் ஊறஅ வுயக ஆழசபயnறெப சுகாதார சபை பெரும்பாலான மருத்துவமனை வருகைக்கு தடை விதித்தது.
முன்னதாக முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட், கொவிட் தொற்றுகள் மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.