அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில், மாநிலம் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட் பாதிப்பை உறுதிசெய்துள்ளது.
5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் குயின்ஸ்லாந்தில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குடும்பத்தில் 5 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த சில நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா என்பதை உறுதிசெய்வதற்கான முக்கிய நாட்களாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த குடும்பம், மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் வசிக்கிறது. முந்தைய உத்தரவுகளைப் போல மாநிலத்தின் சில பகுதிகளுக்கு முடக்கநிலை மட்டுப்படுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.