இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம், நமீபியா, சாம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்ள முடியுமென அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், குறித்த பயணிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முழுமையான தடுப்பூசியினை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணிக்க விரும்பும் பயணிகள், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மற்றும் முறையான விசா வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.