அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பிரித்தானிய வீராங்கனை எம்மா ரடுக்கானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று (சனிக்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்றது.
இதில், பிரித்தானிய வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ்ஸும் விளையாடினர்.
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி 18 வயதான எம்மா ரடுகானு வெற்றி பெற்றுள்ளார்.