தெற்கு ஸ்பெயினின் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட் நகரமான எஸ்டெபோனாவுக்கு மேலே கடந்த புதன்கிழமை தொடங்கிய தீ விபத்தில் ஒரு அவசர ஊழியர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த மலைப் பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவுவதற்காக ஸ்பெயின் அரசாங்கம் ஒரு இராணுவப் பிரிவை நியமித்துள்ளது
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஆறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். மற்ற ஐந்து சமூகங்களில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டனர்.
தீவிபத்தில் 7,400 ஹெக்டேர் எரிக்கப்பட்டதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கோடையில் ஐரோப்பா பல காட்டுத்தீக்களைக் கண்டது.
தொழில்துறை சகாப்தம் தொடங்கியதிலிருந்து உலகம் ஏற்கனவே சுமார் 1.2 செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது.