பிரான்ஸ் கொவிட் தடுப்பூசி நிறுவனமான வல்னேவாவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த கொவிட் தடுப்பூசி ஒப்பந்தத்தை, பிரித்தானியா இரத்து செய்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் அதன் கோரிக்கையை 40 மில்லியனாக அதிகரித்த பிறகு, பிரித்தானியா சுமார் 100 மில்லியன் டோஸை முன்பதிவு செய்திருந்தது.
ஆனால், வல்னேவா நிறுவனம், ஒப்பந்தத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியா அரசாங்கம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை வல்னேவா நிறுவனம், கடுமையாக மறுக்கிறது.
ஸ்கொட்லாந்தின் மேற்கு லோத்தியனில் உள்ள ஒரு தளத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டிருந்தாலும், வால்னேவாவின் தடுப்பூசி இன்னும் சோதனை கட்டத்திலேயே உள்ளது.
லிவிங்ஸ்டனில் உள்ள ஆலையில் சுமார் 100 விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிவதாக கருதப்படுகிறது.
நிறுவனம் அதன் மூன்றாம் கட்ட சோதனைகளின் முடிவுகள் இந்த ஆண்டின் இறுதியில் வெளிவருமென தெரிவித்துள்ளது.