எதிர்காலத்தில் தமிழர்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாட்டு மனித உரிமைகள் தொடர்பான அமைப்பினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தமிழ் மக்களினது மனித உரிமைகளும் எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழு, சிறப்பான முறையில் செயற்பட்டதன் காரணமாகவே பல நாடுகள் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கியதை மறைக்க முடியாது.
குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஓரிருவர் இது தொடர்பாக செயற்பட்டாலும் புலம் பெயர் நாடுகள் குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்கவில்லை.
மேலும், மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு விரலை நீட்டினாலும் அந்த செயற்பாடு உண்மைக்கு மாறாக இருக்காது.
ஆயுதப்போராட்டம் நடைபெற்ற பல நாடுகளிலும் பல தசாப்தங்களுக்கு மேலாக மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்பினால் முடக்கி விடப்பட்டது.
இதேவேளை எதிர்காலத்தில் தமிழர்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள், சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.