100,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும் என்ற அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்து அரசின் நிலைப்பாடல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய திட்டம் வாய்மொழியாகவோ அல்லது அமைச்சரவையிலோ பேசப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
மேலும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமை இயல்பு க்கு திரும்பும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.