நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விண்வெளி தொழிநுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ககன்யான் திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக குறித்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் குறித்த திட்டம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் எனக் கூறிய அவர், இந்த திட்டத்தின் மூலம் 3 பேர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
நியூசிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் பசுபிக் தீவு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகளை தரவும், புதிய பொருட்களை கண்டுப்பிடிப்பதில் ஈடுபடவும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.