பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 73இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 73இலட்சத்து 12ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 647பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 597பேர் பாதிக்கப்பட்டதோடு 201பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 99ஆயிரத்து 147பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 60பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 58இலட்சத்து 78ஆயிரத்து 889பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.