தீவிரமயம் அதிகரிப்பது பலப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துகொண்டிருப்பது இந்த சவாலை தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நிலம் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடுகள் இந்திய சந்தையோடு தொடர்பு கொள்வதன் மூலம் பலன் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















