சமீபத்திய நாட்களில் கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பானிஷ் தீவு கும்ப்ரே வீஜா தேசிய பூங்காவில் உள்ள டெனிகுவியா எரிமலையின் தாயகமாகும். இந்த பகுதியை சுற்றி 4222 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மாக்மா எரிமலைச் சங்கிலியில் புகுந்து, அதன் உச்சத்தை 6 சென்டிமீட்டர் (2.4 அங்குலம்) உயர்த்தியதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இது எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கும்ப்ரே விஜா எரிமலையில் தீப்பிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது எரிமலையிலிருந்து லார்வா குழம்புகள் கசியத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், எரிமலை வல்லுநர்கள் உடனடியாக வெடிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லை என்று கூறினர்.
அரசாங்கம் ஏற்கனவே வெடிப்பு எச்சரிக்கை அளவை உயர்த்தியுள்ளது மற்றும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கைத்தொலைபேசிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் வெளியேறும் போது தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
லா பால்மா தீவில் சுமார் 83,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர். டெனிகுவியா எரிமலை கடைசியாக 1971இல் வெடித்தது, ஸ்பானிஷ் மண்ணில் நடந்த கடைசி மேற்பரப்பு வெடிப்பு இதுவாகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஆனால் குறைவான சக்தி வாய்ந்த நடுக்கம் அருகிலுள்ள தீவான எல் ஹியரோவைத் தாக்கியது, இது நீருக்கடியில் எரிமலை வெடிப்புடன் முடிவடைந்தது.