தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
அன்று ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 28 இலட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது தடவையாக இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 30 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறகின்றமை குறிப்பிடத்தக்கது.



















