ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உருவாக்கிய வாக்குப்பதிவு செயலி, அப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக கிரெம்ளினின் விமர்சகர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய அடக்குமுறைக்குப் பின்னர் மதிப்பீடுகள் சரிந்த போதிலும், ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணமோசடி வழக்கில் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி இரண்டரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மொஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை எதிர்த்ததால் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் நிலவிவருகிறது.
அத்தோடு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துவரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உருவாக்கிய வாக்குப்பதிவு செயலி, அப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.