சீனா- டாலியன் நகரிலுள்ள ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான தோஷிபா, தனது ஆலையை இந்த மாத இறுதியில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதாவது, தற்போதைய வணிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அந்நிறுவனம் இதனை மேற்கொள்கின்றது.
இந்த ஆலையில் சுமார் 650 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் இதில் தொழில்துறை மோட்டார்கள் மற்றும் ஒளிபரப்பு டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்கப்படுகிறது.
ஆனால், உற்பத்தியில் செங்குத்தான வீழ்ச்சி காரணமாகவே மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிக்கி ஆசியா தெரிவிக்கிறது.
குறித்த ஆலை 1991 ஆம் ஆண்டு போ க்ஸிலாய் துணை மேயராக இருந்த காலத்தில் திறக்கப்பட்டது.
தோஷிபா ஆலை பணிப்பாளர், ஒக்டோபர் மாதத்தில் கலைப்பு செயல்முறையைத் தொடங்குவதாக நிக்கி ஆசியாவிடம் கூறியுள்ளார்.
இதன்திறன் வியட்நாம் மற்றும் ஜப்பானுக்கு மாற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.