ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு செய்துள்ளது.
அதாவது 5 நாட்கள் நடைபெறுகின்ற குறித்த கண்காட்சி நிகழ்வு, சொந்தமாக தொழில் தொடங்கும் அல்லது ஏற்கனவே சுயதொழில் ஈடுபடுகின்ற அனைத்து பெண் தொழில்முனைவோருக்கானது என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் ஊடாக தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், தங்கள் பிராண்டுகளை விளம்பரப்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள் என அமைப்பாளர்களில் ஒருவரான ஷீனம் பக்ஷி கூறியுள்ளார்.
மேலும், குறித்த நிகழ்வின் ஊடாக பெண்கள் சமையலறைகளின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மாத்திரமே பொருந்துவர் என்ற சமூக அவப்பெயரை கேள்விக்குள்ளாக்குவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறி பணிப்பாளர் மெஹ்மூத் ஷா, கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
மேலும், சில கைவினைப்பொருட்கள் நெசவு, எம்பிராய்டர், கிரீவல், சங்கிலி தைத்தல் மற்றும் பலவற்றால் பெண்களால் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் புதிய தொழில்முனைவோர் ஊடாக புதிய வடிவமைப்புகள், வண்ணத் திட்டங்கள் மற்றும் கைவினைகளை வித்தியாசமாக சந்தைப்படுத்த வேண்டிய நேரம் இது எனவும் மெஹ்மூத் ஷா கூறியுள்ளார்.
இதேவேளை, பாரம்பரிய உணவு விற்பனையாளர் அஸ்மா பட் (19 வயது) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.
இன்று எனக்கு நல்ல பதில் கிடைத்தால், ஒருவேளை 2-3 வருடங்களில், நான் எனது சொந்த உணவகத்தைத் திறப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.