டெக்ஸாஸ் எல்லையில் குவிந்திருந்த ஹைட்டி நாட்டு அகதிகளை விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் விமான நிலையத்தில் நேற்று மூன்று விமானங்கள் தரையிறங்கியது என்றும் விமானத்தில் தலா 145 பேர் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸில் உள்ள டெல் ரியோவை மெக்ஸிகோவின் சியுடாட் அக்குனாவுடன் இணைக்கும் பாலத்தின் கீழ் சுமார் 13,000 ஹைட்டி நாட்டு அகதிகள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தஞ்சம் கோருவதற்கு முன்பு பெரும்பாலானவர்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு அவசர அமெரிக்க பொது சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் குறித்த அகதிகளுக்கு உணவு மற்றும் போதிய அளவிலான சுகாதார நடவடிக்கைகளை வழங்குவதற்கு உள்ளூர் அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.