அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது.
மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது.
அவுகஸ் ஒப்பந்தம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய சமநிலையை சீர்குலைக்கும் என்றும் வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.
அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியாக இது பரவலாக பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், வடகொரியா நீண்ட தூர கப்பல் ஏவுகணை மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகிய இரண்டு முக்கிய ஆயுத சோதனைகளை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.