சீரம் நிறுவனம் அடுத்த மாதம் சுமார் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதாகவும், ஒக்டோபரில் 21 கோடியே 90 இலட்சம் டோஸ்களை வழங்க முடியும் எனவும் அந்நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரச தீர்மானித்துள்ள நிலையில், இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவில் இதுவரை 82 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.