இந்தியாவில் நேற்று (செவ்வாய்கிழமை) 27 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றினால் பதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 27 இலட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 45 ஆயிரத்தைக் 801 ஆக உயர்வடைந்துள்ளது.