நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.
இந்த நிலையில், குறித்த சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தி, நிவைவேற்றப்படவுள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு உணவை விற்பனை செய்வார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்க இந்த திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.