கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்த கருத்துடைய நட்பு நாடுகள் என்றும், தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் ஒரேவிதமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 இலட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகவும் இருநாடுகளுக்கும் நட்புப் பாலமாக அவர்கள் விளங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா விவகாரத்தையும், அதன் சவால்களையும் பதவிக்கு வந்ததும் வேகமாக கையாண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.