ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகியுள்ளார்.
அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளுவதற்காக இன்று காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.