இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது. என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு முதலீடு அவசியம். அதற்கான வாய்ப்பை வழங்குவது தவறான நடவடிக்கை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாத விடயமொன்றை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நாட்டு வளங்களை விற்பதற்கான நிகழ்ச்சி நிரல் எம்மிடம் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.