கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 923 பேர் இன்று(வெள்ளிக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 510,963 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 45,823 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.















