எகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எகிப்தில் மூன்று இலட்சத்து 278பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 77ஆவது நாடாக விளங்கும் எகிப்தில் இதுவரை 17ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 568பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 29ஆயிரத்து 897பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 53ஆயிரத்து 271பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.