பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 76இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 76இலட்சத்து ஆயிரத்து 487பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 35ஆயிரத்து 983பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 35ஆயிரத்து 623பேர் பாதிக்கப்பட்டதோடு 180பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 34ஆயிரத்து 367பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 916பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 61இலட்சத்து 31ஆயிரத்து 137பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.