மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 130க்கும் மேற்பட்ட வீரர்களை கைது செய்த பெய்ஜிங் பொலிஸார் அவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
பெய்ஜிங்கின் மத்திய இராணுவ ஆணையக (சி.எம்.சி) மனுதாக்கல் பணியகத்தின் முன்னே கூடுவதற்கு மக்கள் விடுதலை இராணுவத்தின் வீரர்கள் முயன்றபோது, சட்டவிரோத கூட்டம் என்ற குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 13 அன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ .வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்க சென்றனர். இருப்பினும், அவர்களில் பலர், பணியகத்தை அடைவதற்கு முன்பே ‘இடைமறிக்கப்பட்டனர் என கூறப்படுகின்றது.
2012 முதல் படைவீரர்கள் தங்கள் மீள்குடியேற்றப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தனர். அதாவது, மாகாண இராணுவ விவகார துறைகளுக்கு எதிராக வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
சீனாவின் மாகாண அதிகாரிகள் பெய்ஜிங்கிற்குச் செல்லும் படைவீரர்களை தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் இடைமறித்து அறியப்படுத்துவதாக கூறப்படுகின்றது.
பெய்ஜிங் சட்டம் மற்றும் ஒழுங்கை பயன்படுத்தி அரசுக்கு எதிராக குரல் எழுப்புவதை கட்டுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான பயிற்சியாக இது மாறிவிட்டது.
இதேவேளை திபெத்தியர்களும் தைவானியர்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறைக்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இது அதன் சொந்த அணிகளில் இருந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும் மற்றும் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தவும் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.