ஸ்கொட்லாந்தில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான கடிதங்கள், அனுப்பப்படுகின்றன.
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் வழங்கப்படும்.
சிறுவர்கள் தடுப்பூசியை ஏற்க வேண்டுமா அல்லது மறுக்க வேண்டுமா என்பது பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களுடன் இணைந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென சுகாதார செயலாளர் ஹம்ஸா யூசுப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வயதில் கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும் கல்விக்கு மேலும் இடையூறுகளைத் தடுப்பதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
இந்த வயதில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஏற்கனவே பாதுகாப்பாக தடுப்பூசி போட்டு வருகின்றன’ என கூறினார்.