Hwasong-8 என்ற புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
குறித்த புதிய ஏவுகணை அதன் ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ள புதிய ஏவுகணையை மூலோபாய ஆயுதம் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை பரிசோதனையுடன் இந்த மாதம் மட்டும் வட கொரியா நடத்திய மூன்றாவது சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.