நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த படையினர், சம்பவ பிரதேசத்திற்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அக்குழுவினரை விரட்டியுள்ளனர்.
இதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளில் தீயணைக்கப்பட்டதுடன், அவ்வீடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சில மர்ம நபர்கள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் கொள்ளைக்காரர்கள் என அழைக்கப்படும் கிரிமினல் கும்பல்கள், கிராமங்களை கொள்ளையடித்து, கால்நடைகளை திருடி, கடத்தல்களை நடத்திவருகின்றன.
இந்த ஆண்டு, இந்த கும்பல்கள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை குறிவைத்து, 1,400 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கடத்தியதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.