கச்சா எண்ணெய்யை பிரித்தெடுப்பதற்கு பணம் செலுத்தாத காரணத்தினால் தமிழகத்தை சேர்ந்த மாலுமி உள்ளிட்ட 13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாலுமிகளை கம்போடியாவுக்கு நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு தங்களை காக்க வேண்டும் என மாலுமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சா எண்ணெயை பிரித்தெடுப்பதில் கம்போடியா அரசுக்கும் அப்ஸரா என்ற எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகின்றது.
இந்நிலையில், எம்டி என்ற ஸ்ட்ரோவோலஸ் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஊழியர்கள் கச்சா எண்ணெயை திருடியுள்ளதாக சர்வதேச காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை கம்போடிய அரசு பெற்றுள்ளது.
இருப்பினும் 3 இலட்சம் பீப்பாய் எண்ணெய் தங்களுக்கே சொந்தம் என கப்பல் நிறுவனம் கூறி வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.