பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார்.
கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது அவர்மீது முட்டை வீசப்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த நபரை மடக்கி பிடித்தனர்.
இதேவேளை, முன்னதாக கடந்த ஜூனில் ஜனாதிபதியை ஒருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.