இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 21 ஆயிரத்து 901 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 29 இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 2 இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 375 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது.