ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் கடந்த ஆண்டினை விடவும் நிகழாண்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.