மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு ஒருபோதும் கிடையாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மார்ச் மாதமளவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்க்கமாக தீர்வு எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.