ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை கொழும்பு விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேவாலயங்கள் மற்றும் ஹொட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, வழக்கின் 24 பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்க அண்மையில் உத்தரவிடப்பட்டது.
அதற்கமைய, இன்று நீதிமன்றில் பிரதிவாதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.