21 ஆம் நூற்றாண்டின் கல்விச்சவால்களுக்கு முகம் கொடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களை இலங்கையில் உருவாக்குவதற்கு ‘இலங்கை ஆசிரிய கல்விப்பல்கலைக்கழகம் ஒன்றை விரைவாகத் தாபிக்கும் முன்மொழிவு வெளியிடப்பட்டுள்ளது. அம் முன்மொழிவில் திருத்தங்களை மேற்கொண்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் நிறுவப்படும் சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள அமைப்பின் ஊடாக 19 தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள், ஆசிரிய வாண்மை நிலையங்கள் இணைத்து இலங்கை ஆசிரியர் கல்வித் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரிய கல்வியியலாலர்கள் சேவை அதிகாரிகள் தொழிற்சங்கம் வலுவான போராட்டங்களை நடாத்தி வருகின்றது.
முன் சேவை ஆசிரியர் கல்விப்பயிற்சியே உலகம் தழுவிய அங்கீகாரம் என்பதற்கு இணங்க இலங்கையில் 1986 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க சட்டம் மூலம் தேசிய கல்வியியற் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இரண்டு வருட வதிவிடப்பயிற்சி, ஒரு வருட உள்ளகைப்பயிற்சியுடன் மிகச் சிறந்த கற்பித்தில் தேசிய டிப்ளோமா பாடநெறி வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய கல்வி நிறுவகம் கலைத்திட்ட முகாமைத்துவத்தையும் கல்வியமைச்சு நிர்வாக செயலாற்றுகைகளைச் சிறப்பாக மேற்கொண்டன. இலங்கை ஆசிரியர் கல்வி வரலாற்றில் இப்பயிற்சி நெறியானது புரட்சிகரமான இளம் நல்லாசிரியர்களைப் பெருமளவு உருவாக்கியது. எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது.
கற்றல் – கற்பித்தல் முறைகளைப் பிரயோகிப்பதிலும், பாடசாலைக் கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளம் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றி எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றனர். தொடர்ந்து கற்று பரீட்சைத் திணைக்களம், தேசிய நிறுவகம், தேசிய கல்வியியற் கல்லூரிகள், கல்வியமைச்சின் அதிகாரிகளாக பெரும்பாலானோர் உருவானார்கள், ஆனாலும் கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகின்றது. தேசிய கல்வியியற் கல்லூரிகள் உருவாகி! எனவே கலைத்திட்டத்தில் முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொண்டு, ஒரு வருடத்தை அதிகரித்து ஒரு ஆசிரிய தொழில் வாண்மைப் பல்கலைக்கழகமாக உருமாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனைகள் செயல் வடிவம் பெற்றன. பொதுவான இது எமது உள்ளு10ர் பல்கலைக்கழகங்களாக அல்லாமல் ஆசிரிய தொழிலுக்கான ஒழுக்க நெறிக்கோவைக்கு அமைய இலங்கை ஆசிரியர் கல்வி தொழில் வாண்மைப் பல்;கலைக்கழகமாக அமைந்து செயலாற்றும்.
தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்
வாண்மை (Pசழகநளளழைn) என்பது உயர் தொழில் அந்தஸ்தைக் குறிக்கின்றது. கடுமையான ஒழுக்கம் நிறைந்த பயிற்சியும், சிறப்புத் தேர்ச்சியும் இதற்கு அடிப்படைகளாகும். இவ்வகையில் உலகலாவிய ரீதியில் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. ஏனைய பல்கலைக்கழகங்களும் தொழில் வாண்மைப் பல்கலைக்கழக செல் நெறியை நோக்கி நகருகின்றன. இலங்கையில் தற்போதய கல்விச் சீர்திருத்த முன்மொழிவில் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகங்களாக ஆசிரியர் கல்வி, தாதியர் கல்வி என்பவை உருவாக்கப்படுவதுடன். முதலாவது நகரப்பல்கலைக்கழகம் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் ஆசிரியர் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்,
ஐ. ஆசிரியர் வான்மைக்குரிய சிறப்பான கல்வி, ஒழுங்கமைப்பு, ஒழுக்கம், மனப்பாங்கு, தொழில்நுட்பம், பிரயோகம் என்பவற்றின் வழியாக மாணவர்களுக்கு அர்ப்பன சேவையாற்றும் திறன்களை வழங்குதல்.
ஐஐ. ஆசிரியர் வாண்மைத் தொழிலை மேற்கொள்ள பொருத்தமான சம்பளத்தைப் பெறுவதுடன் அதற்கு அப்பால் அவர் மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் ஆற்றும் தொண்டு மேலானது என உறுதிப்படுத்தல்.
ஐஐஐ. பட்டம் பெற்றோர் தொழில் வாண்மைச் சங்கத்தினூடாக ஒழுக்க நெறிக்கோவைக்கு உட்படல். கற்பிப்பதற்கான (டுiஉநளெந) அனுமதிப்பத்திரம் பெறுதல்.
ஐஏ. ஆசிரியர் வாண்மைப்பட்ட பயிற்சியைப் பெற்றவர்கள் தவிர்ந்த பிறரால் குறித்த வாண்மையை மேற்கொள்ளாதிருப்பதற்கான சட்ட வரையை அமுலாக்கல்.
ஏ. தொடருறுகல்வி, இரண்டாம்பட்டம், ஆய்வுகள், நூல் வெளியீடுகள், புலமைப் பரிசில்கள் வழங்குவதுடன் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்த செயற்திட்டங்களையும், கலாநிதிப்பட்ட ஆய்வுகளையும் நடைமுறைப்படுத்தல்.
ஏஐ. பாடசாலைகளின் கல்வி, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்திட்டங்கள், செயல்நிலை ஆய்வுகள், கள ஆய்வுகளைப் பிரயோகித்தல்.
ஏஐஐ. பாடசாலைகளுடன் மிக நெருங்கிய உயிர்ப்பான தொடர்புகளைப் பேணல். குறித்த கால இடைவெளியில் இற்றைப்படுத்தல் வாண்மைத்துவ செயலாற்றுகைகளை மேற்கொள்ளல்.
ஏஐஐஐ. கல்வியமைச்சு, மாகாணக்கல்வியமைச்சு, வலயங்கள், பரீட்சைத்திணைக்களம், தேசியகல்வி நிர்வாகம், பொது அமைப்புக்கள், அரச அரசசார்பற்ற தனியார் நிறுவனங்களுடன் இணைப்பாக்கங்களை ஏற்படுத்தி நிலையான நீண்ட கால கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
இவ்வகையில் மனச்சாட்சியுடனும், அர்ப்பணிப்புடனும், இதயை சுத்தியுடனும் ஆசிரியர்கள் தொழில் புரிய வேண்டும் என்பதையே ஆசிரிய தொழில் வாண்மை இலக்கணப்படுத்துகின்றது. இத்தகைய நிலையில் இருக்கும் ஒரு ஆசிரிய வாண்மையாளர் தொழில் திருப்தியைக் கொண்டிருப்பார். இவ்வாறான முழுநிறைவான ஆசிரிய வாண்மை இலங்கையில் இல்லை ஆசிரியர்களும் பலவீனமாக உள்ளார்கள். இதற்குக் காரணம் இன்று வரையான பலவீனமான ஆசிரியர் கல்வி நடைமுறைகளாகும். இவற்றை நீக்க ஒரு உறுதியான பத்தொன்பது தேசியக் கல்வியியற் கல்லூரிகளையும், ஆசிரிய கலாசாலைகளையும், ஆசிரிய வாண்மை நிலையங்களையும் ஒருங்கிணைத்து பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினர் அங்கீகாரத்துடன் சுயாதீனமான புலமை சார் சுதந்திரத்துடன் கூடிய தன்னாதிக்கமுள்ள அமைப்பினூடாக இலங்கை ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும்.
புலமைசார் சுதந்திரம்
தொழில் வாண்மைப் பல்கலைக்கழகங்களிலோ அல்லது ஏனைய பல்கலைக்கழகங்களிலோ பணியாற்றும் கல்வியியலாலர்கள், விரிவுரையாளர்கள் புலமையாளர்களாவார். அவர்கள் புத்தி ஜீவிகளாக மாணவர்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ள செயற்பாடுகளைச் செய்யும் சுதந்திரமுடையவர்களாக இருக்க வேண்டும் தமது புலமை சார் சுதந்திரத்தை பிரயோகிக்க உரிய தகுதிப்பிரமாணங்களைத் தாமே ஒழுக்க நெறிக்கூடாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தின் பொருத்தமற்ற கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் கல்வியின் தரம் குறையும் இது உலக கல்வி மதிப்பீட்டு நியதி. எனவே புலமை சார் சுதந்திரம் இங்கு முதன்மை பெறுகின்றது. இன்று தேசிய கல்வியியற்கல்லூரிகளிலும், ஆசிரியர் கலசாலைகளிலும், ஆசிரிய வாண்மை விருத்தி நிறுவனங்களிலும் கல்வியியலாலர்கள் உயர் புலமையாளர்களாகவே சேவையாற்றுகின்றார்கள்.
ஐ. அவர்கள் இலங்கையின் ஏனைய சேவைத்தர உத்தியோகத்தர்களை உயர்வான பல பட்டங்களை நிறைவு செய்துள்ளார்கள்.
ஐஐ. ஏனைய சேவையாளர்களை விட கூடுதலான நேரம் கடமையாற்றுகின்றார்கள்.
ஐஐஐ. புலமையாளர்கள் என்ற வகையில் பல்வேறு வகையான கல்வியியல் ஆய்வுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆய்வுகள், செயல்நிலை ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளர்களா கடமையாற்றுகின்றனர். ஆய்வுச் சமர்ப்பிப்புக்களை மேற்கொள்கின்றார்கள்.
ஐஏ. தமது புலமைசார் அறிவை தேசியக்கல்வி நிறுவகம் உள்ளு10ர் சர்வதேச பல்கலைக்கழகங்களின் பகுதி நேர விரிவுரையாளர்களாக ஆய்வு மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றுகின்றார்கள்.
ஏ. பாடசாலை மட்ட ஆசிரிய வாண்மை விருத்திகளுக்கு வளவாளர்களாக சேவையாற்றுகின்றார்கள்.
ஏஐ. ஆய்வேடுகள், துறைசார்நூல்கள், இலத்திரணியல் சாதணங்கள் ஆகிய வாண்மை விருத்திசார்பாகப் புத்தாக்கங்களாக வெளியீடு செய்கின்றார்கள்.
ஏஐஐ. வதிவிடத்துடன் கூடிய தேசிய கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்களுக்கு இரவு பகலாக, கற்பித்தல் பயிற்சி இணைப்பாடவிதானம், புத்தாக்கம், தகவல் தொழில்நுட்ப பிரயோகம் விளையாட்டு, அழகியல் தேர்ச்சிகள் ஆகியவற்றில் கல்வியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார்கள் இவ்வகையில் இலங்கை ஆசிரிய கல்விச் சேவையாளர்கள் ஒரு தொழில் வான்மைப்பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயலாற்றுகைகளையும் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றார்கள். எனவே அவர்களின் புலமைசார் வாண்மைத்துவம் உறுதிப்படுத்துகின்றது. எனவே விரைவாக இலங்கை ஆசிரியர் கல்விப்பல்கலைக்கழகத்தை தாபிக்க முடியும்.
கல்விசார் புலமைச்சுதந்திரத்தை நிலை நாட்டி ஒளிமயமான ஆசிரிய வாண்மைக் கல்வியை வழங்க பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் கீழ் சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள அமைப்பினூடாக இப்பல்கலைக்கழகத்தை செயலாற்ற வைக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள், தடைகள், சிக்கல்கள் ஏற்படும் அவற்றை வந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலக் கல்வி அபிவிருத்தி ஆசிரிய வாண்மைக் கல்வி அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. எனவே அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், கொள்கையாக்க நிபுணர்களும் இலங்கையின் எதிர்கால கல்வி அபிவிருத்தியை மையமாகக் கொண்டு இலங்கை ஆசிரியர் கல்விப்பல்கலைக்கழகத்தை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.
– கலாநிதி. பா. தனபாலன் –