சர்வதேச ரீதியில் சுமார் 6 மணி நேரமாக முடக்கப்பட்டிருந்த வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளர்கள் உபயோகப்படுத்தும் குறித்த செயலிகள் நேற்றிரவு செயலிழந்தன.
இதனையடுத்து, குறித்த காலப்பகுதியில் சர்வதேச ரீதியில் இது தொடர்பாக 10.6 மில்லியன் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் அவை செயலிழந்தமைக்கான காரணம் குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியெனச் செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்துக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.