குழந்தைகளின் மனநிலையில் கொரோனா நோய்த் தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயன உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முழுமையான ஆரோக்கியம், நல்வாழ்வைநமது பாரம்பரிய மருத்துவ முறைகள் வழங்கினாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவது சிக்கல் நிறைந்தது எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயப் பின்னணியைக் கொண்ட கிராமப்புற கூட்டுக் குடும்ப அமைப்புகளில் உள்ள குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் அதிக அளவில் பிற குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், தனிக் குடும்பங்களில் தனிமையுணர்வு அதிகரித்து மனநல பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.