உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்துக்கொண்டுள்ளது.
இதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகளான சூர்ய காந்த், மற்றும் ஹிமா கோஹ்லி அமர்வு இந்த வழக்கினை இன்று (வியாழக்கிழமை) முதல் விசாரணைகளை ஆரம்பிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளகது.
லக்கிம்புரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வாகன அணிவகுப்புக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்ட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அஜய் மிஸ்ராவின் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.